
டெல்லி: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரேவின் மனைவி கவிதா உள்ளிட்டோர் இன்று சோனியா காந்தியை சந்தித்து கசாப்பை உடனடியாக தூக்கிலிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
மும்பைத் தீவிரவாதத் தாக்குதலின்போது உயிரை துச்சமென மதித்து தீவிரவாதிகளுடன் சண்டை போடுவதற்காக விரைந்த ஹேமந்த் கர்கரே உள்ளிட்ட 3 உயர் அதிகாரிகள் அநியாயமாக தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இரையானார்கள்.
இந்த துயரச் சம்பவம் நடந்து இன்னும் 3 நாட்களில் ஒரு வருடமாகப் போகிறது. இந்த நிலையில், கர்கரேவின் மனைவி கவிதா கர்கரே, என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சலேஸ்கரின் மனைவி ஸ்மிதா சலேஸ்கர் ஆகியோர் இன்று சோனியா காந்தியை சந்தித்துப் பேசினர்.
தங்களது கணவர்கள் கொல்லப்பட்ட பின்னர் தாங்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள், மன உளைச்சல்கள் குறித்து அவர்கள் சோனியாவிடம் முறையிட்டனர்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கவிதா கர்கரே பேசுகையில், நாங்கள் அவரிடமிருந்து சில உறுதிமொழிகளைப் பெற்றுள்ளோம். எங்களுக்கு ஆதரவாகப் பேசினார். சந்திப்பு முழுவதும் நெகிழ்ச்சியுடன் காணப்பட்டார். உயிர்த் தியாகம் செய்த அனைத்து தியாகிகளின் குடும்பத்தினரும் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து அவருடன் விவாதித்தோம்.
நாங்கள் அவரிடம் பேசிய தனிப்பட்ட விஷயங்கள் குறித்து வெளியில் சொல்ல முடியாது. எங்களுக்கு பெரிய அளவில் எந்த வருத்தமும், புகாரும் இல்லை என்றார்.
இருப்பினும் இந்த சந்திப்பின்போது சம்பவம் நடந்து ஒரு வருடமாகியும் தீவிரவாதி அஜ்மல் கசாப்பை தண்டிக்காமல் வைத்திருப்பது குறித்து கவிதாவும், ஸ்மிதாவும், சோனியாவிடம் அதிருப்தியைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், கசாப்பை உடனடியாக தூக்கிலிட வேண்டும் எனவும் இருவரும் கோபத்துடன் கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதுதவிர, தரக்குறைவான புல்லட் புரூப் உடைகள்தான் தங்களது கணவர்களின் உயிரைப் பறித்ததாகவும் அவர்கள் வேதனைப்பட்டுக் கூறியதாகவும் தெரிகிறது.
இது இன்றைய செய்தி:
எனது நெஞ்சம் என்ன சொல்லுதுன்னா.................
கசாப்பைத்தூக்கில்லிடாமல் இழுத்தடிப்பதற்கு, சில அரசியல் பாதுகாப்பு கொள்கைகள் காரணமாக இருக்கலாம். ஒருவேளை, இருக்கிற ஒரே ஒரு ஆதாரத்தையும் இந்தியா இழக்க விரும்பவில்லையோ? சமீபத்தில் நான் HBO தயாரித்த 'Terror In Mumbai' பார்க்கநேரிட்டது. அந்த படத்தைபார்க்கிற எவரும் கசாப் போன்ற தீவிரவாதிகளை உடனே துண்டு துண்டாக வெட்டணும் என்றுதான் சொல்லுவார்கள். இதே சம்பவம் சவுதியில் நடந்திருந்தால், bulletproof பேரத்தில் ஈடுபட்ட அரசியல்வாதிகளையும் சேர்த்தே அப்பொழுதே தூக்கிலிட்டிருப்பார்கள்.
