ஞாயிறு, 22 நவம்பர், 2009

சூரியன் தேடிய வேட்டைக்காரன்!

நேற்று (22 -11-2009 sunday) சேனல்களை மாற்றிக்கொண்டிருந்த பொழுது, தற்செயலாக சூரியன் தொலைக்காட்சியை பார்க்கவேண்டியதாகிவிட்டது. AVM மின், விஜய் நடிக்கும் வேட்டைக்காரன் படத்திற்கான இசை வெளியீடுதான் அந்த நிகழ்ச்சி. இவ்வளவு பில்டப் கொடுக்கிறார்களே என்று பார்த்தால், அதற்கு காரணம்... இது ஒரு சூரியன் தயாரிப்பு. பல சமகாலத்து திரைப்பட ஜாம்பவான்கள் நடிகர் விஜய்யை புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்த்தார்கள். உண்மையிலேயே விஜய் என்னதான் சாதித்துவிட்டால் என்று ஒரு நிமிடம் யோசித்து பார்த்தேன். திரையில் தோன்றிய ஆரம்ப நாட்களில் இருந்து இன்றுவரை நிறைய மசாலா படங்களை தந்திருக்கிறார். இதுதான் அவர் தமிழ் மக்களுக்காக செய்த பெரும் சேவை. திரைப்படங்களில் சம்பாதித்த ஏராளமான வருமானத்தில் பெரும் சொத்து சேர்த்திருக்கிறார். இப்போது அரசியலிலும் நுழையவேண்டும் என்று ஒரு நப்பாசை. அவரது ஆசை நிறைவேற வேட்டைக்காரன் துணையாக இருப்பானாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக