ஆஸ்கார் அவார்டை தட்டிச்செல்லும் வேட்டைக்காரன்!உலகத்தரமான படங்களை மட்டுமே தயாரித்துக்கொண்டிருக்கும் சன் தொ(ல்)லைக்காட்சி, குணச்சித்திரமான வேடங்களில் மட்டுமே நடிக்கும் உலக நாயகன் (மன்னிக்கவும்: அதற்குதான் கமல் இருக்கிறாரே!) மன்னிக்கவும் அண்டசராசரங்களின் நாயகன் விஜய் இவர்களின் கூட்டுமுயற்சியில் உருவான ஆஸ்கார் அவார்டு வாங்கவேண்டும் என்ற ஒரே முயற்சியில் தயாரிக்கப்பட்ட வேட்டைக்காரன் திரையரங்குகளை கலக்கிவருகிறான்....இது சூரிய தொ(ல்)லைக்காட்சியின் அதிரடியான ஒரு புருடா!
இதற்கு சிகரம் வைத்த மாதிரி சூரிய தொ(ல்)லைக்காட்சியின் இன்றைய (21-12-2009 7:00 இரவு) முக்கிய செய்தியில் நாம் கேட்டறிந்தவை...
"வேட்டைக்காரன் கதாநாயகன் விஜய்யும், அவரது தந்தையும் சன் தொலைக்காட்சி குழுமத்தின் தலைவர் கலாநிதிமாறனை அவரது இல்லத்தில் சந்திதித்து, வெற்றிநாயகனாக்கியதற்கு நன்றி சொன்னார்கள்".
சன் தொலைக்காட்சியில் விஜய்யின் பேட்டியை ஒளிபரப்பினார்கள். அப்பொழுது அவரது தலைமுடி குழம்பியிருந்ததது. (ஒரு டப்பாபடத்தை எப்படி வெற்றிபடமாக்கினார்கள் என்பதே விஜய்யின் குழப்பத்திற்கு காரணமோ?. வேட்டைக்காரன் எப்பொழுது வெற்றிப்படம் ஆனது என்பதுதான் எங்களின் குழப்பம்.)
முதலில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு முக்கியமான் செய்தியை முந்தி தந்ததற்காக உலகத்தமிழர் சார்பாக கலாநிதிமாறனுக்கு எம் நன்றி.இரண்டாவதாக, இன்றைய உலகத்திற்கு மிகவும் தேவையான முக்கியமான கருத்துக்களை மையமாகக்கொண்ட வேட்டைக்காரன் போன்ற திரைப்படத்தை தயாரித்ததற்காகவும் உலத்தமிழர் சார்பாக மறுபடியும் தலைவணங்கி நன்றி சொல்லுகிறோம். உங்கள் பணி தொடரவேண்டும் என வாழ்த்துகிறோம்.
விஜய்யால் மட்டுமே நடிக்கமுடியும் என்பதை மறுபடியும் விஜய் நிரூபித்துவிட்டார். சூர்யா, விக்ரம், கமல் வேறுயாராலும் முடியாது. (எப்படி அய்யா முடியும்? விஜய்தானே அய்யா, இந்த படத்தில் நடிப்பதற்காக முழுத்தொகையும் வாங்கியிருக்கார். பிறகு எப்படி மற்றவர்களால் நடிக்க முடியும்????)
இன்னும் நிறைய சந்தேகங்கள்!!!
ஆஸ்கார் அவார்டு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.!!!
டொமினிக் சவுதி

நீங்க சொன்னது 100க்கு 100ரு சரிதான் மச்சி!
பதிலளிநீக்குரொம்ப பாவம் ஸார் தமிழ் மக்கள்
பதிலளிநீக்குதமிழ் மக்களுக்கு தேவை நல்ல ஞாபக மறதி மருந்து
இல்லேன்னா ஒரே கதைய எத்தனை முறை பார்ப்பாங்க ஸார்
விஜய்யால் மட்டுமே நடிக்கமுடியும் என்பதை மறுபடியும் விஜய் நிரூபித்துவிட்டார். சூர்யா, விக்ரம், கமல் வேறுயாராலும் முடியாது. (எப்படி அய்யா முடியும்? விஜய்தானே அய்யா, இந்த படத்தில் நடிப்பதற்காக முழுத்தொகையும் வாங்கியிருக்கார். பிறகு எப்படி மற்றவர்களால் நடிக்க முடியும்????)
பதிலளிநீக்குஎப்படி மச்சி !!!!
கதிரவன்
உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க தமிழ்10 திரட்டியுடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்
பதிலளிநீக்குஉங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in