வெள்ளி, 25 மார்ச், 2011

தேர்தல் விசித்திர இலவச வாக்குறுதிகள்!!


தேர்தல் விசித்திர இலவச வாக்குறுதிகள்!!
தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. அடடா! இந்த நேரத்தில் அல்லவா இந்தியாவில் இருந்திருக்கவேண்டும் என ஓர் சிறு அங்கலாய்ப்பு.... நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.... பாலங்கள் கட்டுவோம், பள்ளிகூடங்கள் கட்டுவோம் என்று வாக்குறுதிகள் தருவது அந்தகாலம்... ஆனால் இப்பொழுதோ...இலவசமாக மிக்சி தருவோம், லேப்டாப் தருவோம், ஆடு தருவோம், கோழி தருவோம் என வாக்குறுதிகள் தருவது இந்த காலம்.

இதில் கொடுமை என்னவென்றால்.... கடந்த தேர்தலின்போது கலைஞர் ஆட்சி இலவசமாக தொலைக்காட்சிகள் கொடுத்துதான் ஆட்சிக்கு வந்தார்கள் என நம்பியதால்... அம்மாவும் இலவசங்களை அள்ளிக்கொடுப்போம் என இந்த தேர்தலில் அறிவித்திருக்கிறார்கள். இந்த இலவசங்கள்...கலைஞர் அறிவிப்பை பார்த்து ஈயடித்தான் காப்பி அடிக்கப்பட்டது மிக கேவலம். அதிமுகவினருக்கு சொந்தமாக சிந்தனை கூட இல்லாமல் போய்விட்டது மிகவும் அபத்தம்.

இதில் வேடிக்கை என்னவென்றால்...இலவசங்களை கொடுத்து தொடுத்து கஜானாவையே காலிசெய்துவிட்டனர்....தமிழ் நாட்டுமக்களையே சோம்பேறியாக்கிவிட்டார்கள்... மைனாரிட்டி திமுக வினர் என ஜெயா தொலைக்காட்சியில் மணிக்கொருதரம் இப்பொழுதுகூட சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பாவம்தான் ஜெயா தொல்லைக்காட்சி...ஒருவேளை இந்த அம்மாவே ஆட்சிக்குவந்தால் ...அவரது இலவசங்களால்..அப்பொழுது இந்த கஜானா காலியாகாதா? அப்பொழுது தமிழ் நாட்டு மக்கள் சோம்பேறிகள் ஆக மாட்டார்களா??

இலவசங்களைக்கொடுக்கவேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை!
2006 தேர்தல் இலவசங்களின் கதாநாயகன் 'தொலைக்காட்சி' என்றால்...
2011 தேர்தல் இலவசங்களின் கதாநாயகிகள்.... மிக்ஸி...லேப்டாப்...
இப்படியே போனால் 2016...2021 களில் இலவசங்கள் எப்படியிருக்கும் என்று ஓர் கற்பனை...

திமுக: பெண்களுக்கு ACTIVE HONDA.. ஆண்களுக்கு HERO HONDA..
வீட்டுக்கொரு..தேக்குமரம்...வேப்பமரம்..
பெண்களுக்கு இட்லிகொப்பறை, புட்டு குழல்....ஆண்களுக்கு REDWINGS SHOES, GILLETTE BLADES

அதிமுக: (சத்தியமா சொல்லுகிறேன்.... இந்தமுறை திமுகவினரை ஈயடிச்சான் காப்பி அடிக்கவில்லை!!!)
பெண்களுக்கு MARUTHI 800.. ஆண்களுக்கு SCOPRIO JEEP..குழந்தைகளுக்கு SONY PLAYSTATION III .. பெண் பிள்ளைகளுக்கு பொமரேனியன்...வாலிப பையன்களுக்கு அல்சேசன், லாப்ரடார்.
குடும்பத்தலைவர்களுக்கு.. BLACK BERRY...APPLE IPHONE..
ஆசிரியர்களுக்கு APPLE IPAD... மாணவர்களுக்கு APPLE IPOD
வீட்டுக்கொரு..சந்தனமரம்...அரேபிய ஒட்டகம் அல்லது புலி (உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லையா!!)..
ரேசன் அரிசி: மாசத்திற்கு ஒரு டன்!!!.
குழந்தைகளுக்கும் (6 வயதிற்கு கீழ்)... எழும்ப முடியாமல் கிடையிலேயே படுத்திருக்கும் வயோதிக பெருமக்களுக்கும் (80 வயதிற்கு மேல்) HUGGIES அல்லது PAMPERS.
வயதுக்கு வந்த பெண்பிள்ளைகளுக்கு 'WHISPER' உங்கள் சாய்ஸ் அல்லது STAY FREE.
கணவன் மனைவி இருவரும் வேலைபார்த்தால் வீட்டில் இருக்கும் குழந்தைகளை கவனித்துக்கொள்ள இலவச வேலைக்காரி வழங்குவதுதான் ஜெயா அம்மாவின் இலவசங்களின் உச்ச கட்டம்!!!!

குறிப்பு: சத்தியமா இது என் கற்பனையே! நெட்டில் சுட்டதல்ல!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக